சென்னை:

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பெங்களூரு போலீஸார் எச்சரித்துள்ளனர்.


இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசுக்கு பெங்களூரு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், தமிழகத்தில் ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரயில்வே டிஜிபி. சிறப்பு டிஜிபி, ஐஜிக்கள், கலெக்டர்களுக்கு தமிழக முதன்மைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.