ஞ்சாவூர்

பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்கத் தஞ்சை  மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நேற்று முன் தினம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது.

 

தஞ்சை நகரில் உள்ள மகர்நோன்பு சாவடி, விஜய மண்டபத் தெரு, மிஷன் சாலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று  உள்ளது.  சுமார் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையில் வீடும், சுற்றிக் காலி இடமும் உள்ளன. சசிகலாவின் இந்த வீட்டில் தற்போது ஜெ. மனோகரன் குடியிருந்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்த வீட்டுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அந்த ஆணையில், “இந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தறுவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இக்கட்டுமானம் வழியே செல்பவர்களுக்கும், கட்டிடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.   அத்துடன் இக்கட்டிடம் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது.

இந்த அபாயகரமான கட்டிடத்தை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிடத்தில் வசிப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தைத் தக்க முன்னேற்புடன் இந்த அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

அதற்குத் தவறும் பட்சத்தில் தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இச்செயலுக்கான செலவுத் தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இதுவரை இந்தக் கட்டிடம் இடிக்கப்படவில்லை. ஆகவே இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் அறிவிப்பாணையை நேற்று முன் தினம் அதாவது0 புதன்கிழமை அன்று ஒட்டினர். அந்த ஆணையில், இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், இந்த அலுவலக அறிவிப்பின்படி உட்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் , “தஞ்சை மாநகரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், சிவகங்கை பூங்கா அருகேயுள்ள பழைய கல்வித் துறை அலுவலகக் கட்டிடம் உள்பட 4 கட்டடங்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், இக்கட்டிடமும் ஒன்று என்னும்  அடிப்படையில் இந்த அறிவிப்பாணை ஒட்டப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.