சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் திடீரென வேகம் எடுத்து வருகிறது. நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் 1,489 ஆக தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. அதாவது, ஒரேநாளில் டவுள் மடங்காக தொற்றுபரவி வருகிறது.. இதனால், தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி எனப்படும் எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 1,417 மாணவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. இதில், 46 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.