சென்னை :

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்தது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 57 பேர் உயிரிழந்தனர், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தபட்டோர் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்தது என்று சீன சுகாதார அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர்.

உலகெங்கிலும் இதுவரை 17405 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1 பிலிப்பைன்ஸ் 361 சீனர்கள் உள்ளிட்ட மொத்தம் 362 பேர் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம்

 

தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பை உலகளாவிய அவசரநிலை என்று அறிவித்துள்ளது. Image Courtesy : Reuters

 

ரஷ்யாவில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று உறுதிப்படுத்தப்பட்டது. வைரஸ் பாதித்த இருவரும் சீன குடிமக்கள் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் அறிவித்தது.

 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவில் அசுர வேகத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை ராணுவத்திடம் ஒப்படைப்பு

சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது , மேலும் சீனாவிற்கு செல்லும் ரயில் சேவையையும் நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் விலங்களுக்குப் பரவும் அபாயம் – செல்லப்பிராணிகளுக்குத் தடை

 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நீடிக்கப்பட்ட  சீன புத்தாண்டு விடுமுறை ஆகியவற்றால் அச்சம் கொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றதால் சீன பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.