சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, திருச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள  நிலையில், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கும்படி  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தியாவில்  வைரஸ் பாய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இது H1N1 பற்றி காய்ச்சலின் திரிபான H3N2 Influenza எ என்று கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ராக்கெட் வேகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. குழந்தைகளின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, இந்த வைரஸ் குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமல் அல்லது தும்மும்போது, ​​அதன் நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவும், மற்றொரு நபர் சுவாசிக்கும்போது, ​​இந்த நீர்த்துளிகள் அவரது உடலுக்குள் சென்று அவரைப் பாதிக்கிறது. கொரோனாவிலும் இதுதான் நடக்கிறது. இதிலிருந்து H3N2 இன்ஃப்ளூயன்ஸா காற்றிலும் பரவும் என்பது தெளிவாகி உள்ளது. இதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது கொரோனா மாறுபாடு வைரசான ஒமிக்ரான் திரிபும் பரவத்தொடங்கி உள்ளது.  தொற்றும். தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒருநாளில் மட்டும் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9-ம் தேதி ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்றுடன்  இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் எதனால் உயிரிழந்தார், அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பது குறித்து ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மேலும், திருச்சியில்  உயிரிழந்த இளைஞருடன் கோவா சென்ற 4 பேர் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,618-ஆக பதிவாகியுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற  1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடததப்படும் என அறிவித்து 1,586 இடங்களில் அந்த காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட முகாமில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாது, அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல் விடப்பட்டது. இந்த காய்ச்சல் பதித்தவர்கள் வெளியில் இரும்மும் போதும், தும்மும் போதும் அந்த நீர் திவலைகள் மற்றவளை பதித்து காய்ச்சல் பரவக்கூடாது என்பதாலேயே அவர்களை தனிமை படுத்த வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பில் கொரோனா காலா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சல் மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்த்து வருவதால் பெரியஅளவில் கூட்டம் கூடக்கூடிய இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம் என கூறப்படுகிறது. னமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் நடமாடும் மற்றும் குட்கிராமங்களுக்கும் சென்று சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளோம். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்பு வழங்கப்படுகிறது.

அதனால், பொதுமக்கள் மீண்டும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியவர், முக்கவசம் அணிவது நல்லது என்று வலியுறுத்தி உள்ளார்.