டெல்லி: தமிழ்படம் உள்பட பல இந்திய படங்களுக்கு ஆஸ்கர் அவார்டு  கிடைத்துள்ள நிலையில், . ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழ்ப்பட The Elephant Whisperers மற்றும் ஆர்.ஆர்.ஆர்.  உள்பட பல படங்களுக்கு அவார்டு கிடைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய-அமெரிக்க தமிழ் குறும்பட ஆவணப்படம் ஆகும், இது ஆவணப்பட தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது இயக்குனராக அறிமுகமான முதல் படம்.  இந்த ஆவணப்படம் தம்பதியருக்கும் அவர்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு அனாதை யானை ரகுவுக்கும் இடையே ஏற்படும் பிணைப்பைப் பற்றியது. இதற்கு ஆஸ்கர் அவார்டு கிடைத்துள்ளாது.

அதுபோல,  “ Everything Everywhere All at Once” படம் சிறந்த படம், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்குநர், திரைக்கதை, எடிட்டிங் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றது. இதேபோல் All Quiet on the Western Front படம் சிறந்த ஒளிப்பதிவு, சர்வதேச படம், தயாரிப்பு வடிவமைப்பு, பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளில் வென்றது.  அவதார்-2 படம் சிறந்த காட்சியமைப்புக்காகவும், பிளாக் பேந்தர் வுகாண்டா ஃபார் எவர் படம் சிறந்த ஆடை வடிவமைப்புக்காகவும், சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த நடிகர் பிரிவில் ”தி வேல்” படத்துக்காகவும் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ”ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாறு படைத்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் வெளியிட்ள்ள வார்ழத்து டிவிட்டில்,   ” நாட்டு நாட்டு பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். இந்தியா பெருமிதம் கொள்கிறது” என ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை The Elephant Whisperers படம் உணர்த்தியுள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில்,  “ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்காவுக்கு வாழ்த்துக்கள்.இந்தியத் தயாரிப்பிற்காக முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை. இந்த குறும்படம் உருவாக்கம் மற்றும் கதை நகரும் அமைப்பு அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.