சென்னை

னியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளதால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசு மொத்த உற்பத்தியில் 75% கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.  மீதமுள்ள 25% தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு விற்கும் விலையின் அடிப்படையில் அரசு தடுப்பூசிகள் விலையை அறிவித்துள்ளது.  அதன்படி ஒரு டோஸுக்கு கோவிஷீல்ட் மருந்து ரூ.780, கோவாக்சின் மருந்து ரூ. 1410 மற்றும் ஸ்புட்னிக் ரூ.1145 என அறிவிக்க[பட்டுள்ளது.

இந்த விலையில் 5% ஜி எஸ் டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.150 ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.