சென்னை: ஓரிரு நாளில் 18+க்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து  உள்ளார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. தொற்றின் 2வது அலையின் தாக்கத்திற்கு வயது பேதமின்றி ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். தொற்றுபரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி, மருந்து பற்றாக்குறையால் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில்,  18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை நாளை அல்லது நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.