சென்னை: தமிழக அரசே நேரடியாக கிரயோஜனிக் கண்டெய்னர்களை இறக்குமதி செய்கிறது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. தொற்று பரவல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டன.

அதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து, கிரயோஜனிக் கண்டெய்னர்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழகஅரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திரவ ஆக்சிஜனை எளிதில் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், கிரயோஜனிக் கண்டெய்னர்களை  வெளிநாடுகளில் இருந்து தமிழக அரசு நேரடியாக இறக்குமதி செய்கிறது என்று கூறினார்.