மும்பை: இந்தியாவிலேயே, அதிகளவு கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகித்த மாநிலமாக மராட்டியம் மாறியுள்ளது. அந்த மாநிலத்தில், இதுவரை மொத்தமாக 83110926 டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கடுத்த இரண்டாவது மாநிலமாக குஜராத் மாநிலம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலமும், நான்காவது இடத்தில் உத்திரப்பிரதேசமும் உள்ளன.

இந்தியாவில், பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் ஆஸ்ட்ராஸெனகா தடுப்பு மருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அம்மருந்துகள் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், சமீப நாட்களில், இந்தியாவில் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், இந்தியாவில், எந்தெந்த மாநிலங்களில், எவ்வளவு டோஸ்கள் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்ற விரிவான விபரம் உள்ளது.