4பேருக்கு கொரோனா: கோயம்பேடு சந்தை இடமாற்றம்?

Must read

சென்னை:

மூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க  4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  கோயம்பேடு சந்தையை ஊருக்கு வெளியே  இடமாற்றம் செய்வது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் தேவையைக் கருதி கோயம்பேடு சந்தையை பல கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது.  ஆனால், கோயம்பேடு வணிகர்களோ, அங்கு செல்லும் வணிர்களோ, பொதுமக்களோ, எந்தவித பாதுகாப்பு கவசமின்றி யும், சமூக விலகளை கடைபிடிக்காமலும் கூடி வந்தனர். இதனால், அங்கு கொரோனா பரவும் அச்சம் நிலவியது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு சீல் வைத்துவிட்டு தற்காலிக சந்தை ஊருக்கு வெளியே கொண்டு வருவது குறித்து அரசு சிந்தித்து வருகிறது.

இதையடுத்து, கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் அங்குள்ள வியாபாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆனால், அதற்கு வியபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டனர்.  இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த   சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை கோயம்பேடு சந்தையை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெறும் என்று கூறியவர்,  சந்தையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சந்தையை மூட வேண்டிய நிலைமை ஏற்படும்  என்றும் எச்சரித்தார்.

More articles

Latest article