டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு  7, 19 ,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  புதிதாக 22,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 467 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

 நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையானது 7,19,665 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 20,160ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை  நோய்த்தொற்றில் இருந்து 4,39,948 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது 61.13ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் புதிதாக 5,368 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2,11,987ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 85,326  பேர் மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்கு  கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்,  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,206ஆக அதிகரித்துள்ளது.  இவர்களில் 1,201 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.
டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,379 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,00,823 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றில் இருந்து  72,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் 36 ஆயிரத்து 772 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 ஆயிரத்து 315 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 28 ஆயிரத்து 636 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19  ஆயிரத்து 109 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.