டெல்லி:
ந்தியாவில் நேற்று ஒரே நாளில்   425 பேர் பலியானதையடுத்து,  கொரோனா பலி எண்ணிக்கை யில் உலகில்  அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் கொரோனாத் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. பிரேசிலில் 16 லட்சம் பேருக்கு கொரோனா உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில், 7 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு கொரோனா உள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா சிகிச்சை பலனின்றி ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் 425 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ஏற்பட்ட இந்த உயிரிப்பு விகிதமானது அமெரிக்காவைவிட அதிகமானது. இதன் காரணமாக, கொரோனா உயிரிழப்பு பட்டியலில் 8வது இடத்தில் இருந்த இந்தியா,  நேற்றைய  இறப்பு விகிதத் தில்  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது
அமெரிக்கரிவில் கொரோனாவுக்கு இதுவரை  1.32 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்கா பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து,.  பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் அதைத் தொடர்ந்து 8வது நாடாக இந்தியா தொடர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி பிரேசிலில் ஒரே நாளில் 656 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 425  பேரும், அமெரிக்காவில் 360 பேரும் கொரோனா காரணமாக உயிரிழந்துள்னர். இதனால் நேற்று கொரோனா பாலி எண்ணிக்கையில் அமெரிக்காவை மிஞ்சி உயிரிழப்பு பட்டியலில் 2வது இடத்தை பெற்றது.
இந்தியாவின் இறப்பு விகிதம் நேற்று  காலை 2.8 சதவீதமாக இருந்தது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 3 சதவீதத்துடனும், இரண்டு வாரங்களுக்கு முன்பு 3.2 சதவீதத்துடனும் காணப்பட்டது.
அமெரிக்காவின் இறப்பு விகிதம் 4.5 சதவீதமாகவும், பிரேசில் 4.1 சதவீதமாகவும் உள்ளது. உலகளாவிய இறப்பு விகிதம் 4.7 சதவீதமாக உள்ளது.