சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக, தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மாநிலத்திலேயே அதிக பாதிப்பு கோவையில் தொடர்கிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மாநிலம்  முழுவதும  கடந்த 24 மணிநேரத்தில் 30,016 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 16,849 பேர். பெண்கள் 13,167 பேர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,39,716 பேர் ஆக அதிகரித்துள்ளது. இன்றும் தொடர்ந்து மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது.

அதிகபட்சமாக  இன்று கோவையில் 3,692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில்,  2,705 பேர்  பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 486 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. இன்று உயிரிழந்த 486 பேரில்,  181 பேர், தனியார் மருத்துவமனையிலும்இ , 305 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.  இன்று உயிரிழந்தவர்களில் 348 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 138 பேர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 31,759 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 17,06,298 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,74,349 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,73,38,092 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வார்டில் 3,10,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,157 என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சோதக்க தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 198 தனியார் ஆய்வகங்கள் என 267 ஆய்வகங்கள் உள்ளன.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,63,763. இதுவரை எடுக்கப்பட்டுள்ள மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,67,31,660.

இன்று மாநிலம் முழுவதும் 5718 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 14438 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 524 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.