மும்பை: கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர் வருவாய் பேரிழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை விற்பனை செய்வதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஏலம் ஜூலையில் நடைபெறுகிறது.

கொரோனா தொற்று பரவல் உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது.  தொற்றுபரவல் தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் விமான சேவை உள்பட அனைத்து விதன போக்குவரத்துகளையும் தடை செய்துள்ளன. இந்தியாவிலும் விமான சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன. இதனால் விமான நிறுவனங்ஙகள்  பேரிழப்பை சந்தித்து வருகின்றன.

இதற்கிடையில்,  இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில்  ஏர் இந்தியா நிறுவனமும் பெரும்  நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போதைய கொரோனா பரவல் தடை காரணமாக, இழப்பு அதிகரித்த உள்ளது. இதுப்பு 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் இழப்பை சரிகட்டும் வகையில், ஏர் இந்தியாவுக்கு சொந்தமான  நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்பட  10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவன அசையா சொத்துக்களை வாங்க விரும்புவோர் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.