சென்னை: 
ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த காலங்களில் மழை நீர் தேங்கிய 144 இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றும், இதன் முதல் கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் பணி நடைபெற உள்ளது. சென்னையில் ரூபாய் 120 கோடியில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.