டெல்லி: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியில்,. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடிமான முடிவுகளை எடுக்க தயங்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபேது,  சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு சச்சின் பைலட், ”அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், இழிவான சொற்களையும் பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல” என்று பதிலடி கொடுத்தார். இவர்களின் முட்டல் மோதலால் அம்மாநில காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தற்போது,  மத்தியபிரதேச மாநிலத்தில் யாத்திரையை தொடர்ந்து வருகிறார். அவர் டிசம்பர் 4ந்தேதி ராஜஸ்தான் எல்லைக்குள் நுழைகிறார்.

இந்த நிலையில், இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை. அசோக் கெலாட் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருகிறது என்றவர்,  அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது என்றார்.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஒருவேளை கடினமான முடிவு எடுக்க வேண்டியது இருக்கும், அதுபோன்ற முடிவை எடுக்க காங்கிரஸ் தயங்காது. ஒருவேளை இரு அணிகளுக்கு இடையே சமரசம் உருவாக்குவதாக இருந்தால், அதையும் செய்வோம் என தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது. மற்ற மாநிலங்களைப்போல் ராஜஸ்தானிலும்,  பாதயாத்திரை வெற்றி பெறும் என்றவர், மத்திய அரசு,  பொது சிவில் சட்டம் குறித்து பேசி வருகிறது. இந்த சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடக்க வேண்டும். ஆனால், குஜராத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இத்தகைய பிரித்தாளும் பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது. தேர்தலுக்கு பிறகு அதை மறந்து விடும் என்றவர்,  குஜராத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. கீழ்மட்டத்தில் ஆம் ஆத்மி பலமாக இல்லை என தெரிவித்தார்.