டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சர்வர்களில் 2 முதல் 3 கோடிக்கும் அதிகமான நபர்களின் தரவுகள் உள்ளது.

இதில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் ஆறு நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இந்த விவரம் கடந்த புதனன்று தெரியவந்ததை அடுத்து தேசிய தகவல் மையம் – என்.ஐ.சி.யைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து அனைத்து கணினிகளுக்கும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைத்தது. இன்று வரை கணினிகள் வேலை செய்யததால் நோயாளிகளின் பல்வேறு தகவல்கள் இல்லாமல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிப்டோ கரன்சியாக ரூ. 200 கோடி தரவேண்டும் என்று ஹேக்கர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

க்ரிப்டோ கரன்சிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில் இதனை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சைபர் தீவிரவாதம் குறித்து சர்வதேச அளவில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வேறு நாடுகளின் உதவியுடன் இந்த பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வுகாணும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது இருந்தபோதும் இதற்காக எத்தனை கோடி செலவாகும் என்று தெரியவில்லை.