ராம்கார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கார் தொகுதியில் நடந்த இடை தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது.

நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த லட்சுமண் சிங் மரணம் அடைந்தார். அதனால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று முன் தினம் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. அத்துடன் அரியானாவின் ஜிந்த் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடந்தது. ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர், பாஜக சார்பில் சுக்வந்த் சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜகத் சிங் ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளர் சுக்விந்தர் சிங்கை விட 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவரது வெற்றியை தொடர்ந்து 200 உறுப்பினர் களை கொண்ட  ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்க 100 ஆக உயர்ந்துள்ளது.

அரியானாவின் ஜிந்த் தொகுதியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடைய வில்லை. அங்கு பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மிதா முன்னிலையில் உள்ளார்.