வுகாத்தி

குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மக்கள் அரசு தங்களுக்கு அளித்த விருதுகளை திருப்பி தர முடிவு செய்துள்ளனர்.

அரசு அசாம் கிளர்ச்சியின் போது உயிரிழந்தோர் குடுமத்தினருக்கு கடந்த 2016 ஆம் வருடன் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி கவுரவ விருதுகளை வழங்கியது. இந்த விருது கணவன், மகண்களை இழந்த விதவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருதுடன் ரூ. 5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எல்லைப் பகுதி மாநிலங்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடியேறியவர்களில் இஸ்லாமியரை தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு அசாம் மாநில மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அசாம் கிளர்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பங்களின் கூட்டமைப்பான ஸ்வாஹித் பரியல் சம்நாய்ரகி பரிஷத் உள்ளது. இந்த அமைப்பு, “மத்திய அரசு இந்த குடியுரிமை சட்ட (திருத்த) மசோதாவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.

எங்களுக்கு உயிரிழந்தவர்களின் நினைவாக வழங்கப்பட்ட விருதுகளை மீண்டும் அரசுக்கே திருப்பித் தர முடிவு செய்துள்ளோம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் எங்கள் மக்கள் செய்த உயிர் தியாகம் அர்த்தமற்றதாகி விடும். எனவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அசாம் அரசுக்கு இந்த விருதுகளை திருப்பி தர உள்ளோம்” என தெரிவித்துள்ளது.