காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவ்லா மானியோ காலமானார்.

90 வயதான பவ்லா மானியோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

ஆகஸ்ட் 23 ம் தேதி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் அவரை காண வெளிநாடு சென்றனர்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 27 ம் தேதி அவர் காலமானதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் இத்தாலியில் நேற்று நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.