டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான  தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 11மணி முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரே இருந்து வருவதால், தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வேட்புமனுத்தாக்கல், வாக்கு எண்ணிக்கை உள்பட தேர்தல் தொடர்பான அறிவிப்பை, கட்சியின் தேர்தல் குழு தலைவர் மிஸ்திரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி,  காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு காலை 11மணி முதல் மாலை 4மணி வரை மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ள  நிலையில், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். மேலும், சசிதரர், கார்கே, திவாரி, திக்விஜய்சிங் உள்பட பலர் களத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் 24ந்தேதி தொடங்குகிறது… முழு விவரம்…