புதுடெல்லி:
தானியை காப்பாற்ற மோடி அரசு ராகுல்காந்தியை பழி வாங்குகிறது என்று தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்பியுமாக இருந்த ராகுல் காந்திக்கு அண்மையில் சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. சுதந்திர இந்தியாவில் அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள், இதுவரை யாருக்கும் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், முதன்முறையாக அதிகபட்ச தண்டை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாஜக இதனை நீதிமன்ற நடவடிக்கை என்றாலும், அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காக மத்திய பாஜக அரசு செய்த சூழ்ச்சி என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், அதானியை காப்பாற்ற மோடி அரசு ராகுல்காந்தியை பழி வாங்குகிறது என்று தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.