சென்னை,

ரணியில் தனக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை நிறுத்திய நந்தினிக்கு என்ற சிறுமிக்கு திமுக எம்.பியான கனிமொழி பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 9ம் வகுப்பு படித்த சிறுமி நந்தினிக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைக்க முயன்றனர். திருமணம் வேண்டாம் என அவர் சொன்னதை கேட்க யாரும் இல்லை. அவரே நேராக கலெக்டரிடம் பேசி திருமணத்தை நிறுத்தியுள்ளார். அன்று அரசு விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

நந்தினியைப் போன்ற வீரப்பெண்களால்தான் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும். பலவேறு துறைகளில் பெண்கள் சாதித்து காட்டிய பின்னரும், குழந்தை திருமணம் முற்றிலுமாக ஒழிக்கப்படாதது வேதனை தருகிறது.

பெண்களுக்கு கல்வி, அறிவு வேண்டியதில்லை என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும். மாற்றத்துக்கான அறிகுறியாக நந்தினி காட்சி தருகிறார்.. அவருக்கு வாழ்த்துக்களுடன்

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.