சென்னை:
ஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாநில கருவூலத்திற்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் செலவாகும் என்ற நிலையிலும் இந்த நடவடிக்கையை மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 70 ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய சன்னி, பஞ்சாபில் பெட்ரோல் இந்த பிராந்தியத்தில் மலிவானதாக மாறியுள்ளது என்று கூறினார். டெல்லியுடன் ஒப்பிடுகையில், பஞ்சாபில் பெட்ரோல் இப்போது 9 ரூபாய் குறைவாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அடிப்படை எண்ணெய் விலை, மதிப்பு கூட்டு வரி, மத்திய கலால் மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை அடங்கும். பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 10 ரூபாயும் குறைப்பதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது.

தற்போது, பஞ்சாபில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.106.20 மற்றும் ரூ.89.83 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.