சேலம்:

டந்த 23 ஆண்டுகளாக வரி கட்டாமல் இழுத்தடித்து வரும் மேட்டூர் அனல் மின் நிலையம் ரூ.6 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இதை உடனே கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், அனல் மின்நிலையம் ஜப்தி செய்யப்படும் என மேட்டூர் பேரூராட்சி தரப்பில் இருந்து எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அருகே உள்ள மேட்டூரில் சுமார் 3ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2 அனல்மின் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதற்கான வரி 1993ம் ஆண்டு முதல் செலுத்தப்பபடவில்லை என்று பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுவரை சுமார்  6 கோடி ரூபாய் வரிபாக்கி உள்ளதாகவும், வரியை உடனே செலுத்துமாறு பேரூராட்சி சார்பில் பலமுறை நினைவூட்டல் கடிதம் எழுதியும் அனல்மின் நிலையம் நிர்வாகம் தரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது நிதிச்சுமையில் தத்தளித்து வரும் பேரூராட்சி  அனல் மின் நிலைய நிர்வாகம் உடனடியாக நிலுவையில் உள்ள சொத்துவரியை செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் மேட்டூர் அனல் மின் நிலையத்தினை ஜப்தி செய்ய பேரூராட்சி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.