புதுடெல்லி:

அதிகபட்ச அரசு அதிகாரம் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்திவிடும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘மூன்றாவது தூண்’ என்ற நூலில் கூறியிருப்பதாவது:

பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் மலைவாழ் மக்களாக இருந்தனர். அவர்களது சமுதாயம், அவர்களது ராஜ்யம், அவர்களது சந்தைப் பொருளாதாரம் ஆகியவை ஒன்றொக்கொன்று பின்னிப் பிணைந்திருந்தது.

,குழந்தை வளர்ப்பு, உணவு மற்றும் பொருட்கள் பண்ட மாற்று முறை, முதியவர்களின் உடல் நலனைப் பேணுதல் ஆகியவை எளிதாக இருந்தன.

மலைவாழ் மக்களின் தலைவர் அல்லது மூத்தவர்கள் சட்டத்தை செயல்படுத்துவார்கள். தங்கள் நிலத்தை பாதுகாக்குமாறு மலைவாழ் மக்களின் படையினருக்கு உத்தரவிடுவார்கள்.

சந்தையும், அரசும் தனித்தனியே இருக்கலாம். ஆனால் அவை சமூகத்தோடு இணைந்தே இருக்க வேண்டும். ஆனால் இன்று இப்போது ஒன்றை யொன்று ஆக்கிரமிக்கின்றன.

சில செயல்பாடுகள் சமூகத்தில் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. பழங்காலத்தில் குழந்தை பிறப்புக்கு அண்டை வீட்டார் உதவுவார்கள்.
இன்றைய பெண்கள் மருத்துமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பழங்காலத்தில் வீட்டில் தீ பிடித்தால் மீண்டும் கட்டிக்கொள்வார்கள். இப்போது அதற்கான இன்சூரன்ஸை பெறுகிறோம்.  இன்று எல்லாமே தலைகீழாக உள்ளது.

சமுதாயத்தின் மூன்று தூண்களும் சமமற்ற நிலையில் உள்ளன. சமநிலை சமுதாயத்தால் மட்டுமே, அதன் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

அதிகபட்ச சந்தைப்படுத்துதலும் சமுதாயமும் சமமற்றவை. அதிகபட்ச சமூகமும் சமுதாயமும் நிலையானது. அதிக பட்ச அரசு அதிகாரமும் சமுதாயமும் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்தும். எனவே சமநிலை அவசியம்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.