திருப்பதி

ரும் 18 ஆம் தேதி திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழால் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திருப்பதியில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.பிரம்மா  அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுப் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார். இது பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாகப் புராணங்கள் கூறுகிறது.

இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்கத் தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.  இதற்காக ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. திருப்பதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்யப்பட்டு வருகிறது/.

வாகன சேவைகள் பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன நடைபெற உள்ளன. 9 மாநிலங்களைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றுப் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். திருப்பதியில்  கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

நான்கு மாடவீதிகளில் கேலரிகள் அமைக்கப்பட்டு கருட சேவையின் போது 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்து பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருப்பதி கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாகக் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதற்குப் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர். விழாவையொட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்குக் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.