கோவை: வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயர் தரப்பினர், பக்கத்தில் குடியிருந்து வரும் வாடகைதாரர் வீடு மீது சிறுநீர் ஊற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  கோவை  திமுக மேயரின் குடும்பத்தின் மீதான புகார் குறித்து உண்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாஜக எம்எல்ஏவானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில். சிறுநீர் பிடித்து, அவர்களின் வீடுமீது  பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே இதுபோன்று சென்னையில் நடைபெற்ற சம்பவத்தில் டாக்டர் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கோவை மேயர் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவை மணியகாரன் பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வரும் சரண்யா – கோபிநாத் தம்பதியினர் குடியிருந்தும் வரும்  குடியிருப்புக்கு அருகாமையில் இருக்கும் கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், சரண்யா தம்பதி, வீட்டை காலி செய்ய வைக்க திமுக மேயர் குடும்பத்தினர்  பல்வேறு  வகைகளில் தொந்தரவு செய்வதாகவும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட சரண்யா குடும்பத்தினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கோபிநாத்-சரண்யா தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதியில்தான், கோவை மேயர் கல்பனாவின் தாய் காளியம்மாள் மற்றும் மேயரின் தம்பி குமார் வசிக்கிறார்கள். கல்பனா மேயராவதற்கு முன், காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்காக, கோபிநாத்திடம் குமார் 15,000 ரூபாய் வாங்கியதாகவும், அதில் அதில் 5,000 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், 10,000 ரூபாயை கொடுப்பதற்கு முன், அவரது அக்கா கல்பனா, கோவை மேயராகி விட்டார். கொடுத்த பணத்தை குமாரிடம், கோபிநாத் கேட்ட போது, திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது மேயராக உள்ள கல்பனா, தனது அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி வருவதாகவும்,  தன்னை வீட்டை விட்டு வெளியேற வைக்க  தன் வீட்டில் கெட்டுப்போன பொருட்களை கொட்டுவதாகவும், வாளியில் சிறுநீரைப் பிடித்து, அதையும் தன் வீட்டின் சமையலறைச் சுவற்றின் மீது கல்பனாவின் தம்பி குமார் கொட்டியதாகவும் குற்றம்சாட்டி  உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இதுபோன்ற தொல்லைகளை, சரண்யா குடும்பத்தினர் சிசிடிவி காமிரா மூலம் பதிவு செய்து,  திமுக மேயர் குடும்பத்தினரின் அநாநகரி செயல்குறித்து  மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். இருந்தாலும் மேயர் குடும்பத்தினர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதால், பாதுகாப்பு கேட்டு கோவை காவல் ஆணையர் அலுவலகம் வரை வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

 இதனிடையே கோவை மேயர் கல்பானா சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தவறான தகவல் என்றும், ஆதரமற்ற விஷயங்களை பேசுவதாகவும் பதில் அளித்தார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,  கோவை மேயரின் குடும்பத்தின் மீது அளிக்கப்பட்ட புகார் மீது மாநில அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே திமுக நிர்வாகிகளாகட்டும், மக்கள் பிரதிநிதிகளாகட்டும், அவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிற விஷயம்.

கோவை மேயர் விஷயத்தில் மாநிலத்தின் முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலம், சாதாரண மக்களும் சட்டத்தின் பலனை பெற முடியும் என்பதை பார்க்க முடியும். இந்த விஷயத்தில் உண்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை கட்சி சார்பற்றது. யாருக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் இருக்கிறதோ அவர்கள் மீது மத்திய அரசின் ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். பாஜகவுக்கும் மத்திய ஏஜென்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே சென்னையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது.  அடுக்கு மாடி குடியிருப்பில், தனது வீட்டு அருகே குடியிருந்து வந்த பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக அகில பாரதிய வித்யி பரிஷத் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில், கோவை திமுக  மேயர் குடும்பத்தினர் கைது செய்யப்படுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….