நாகர்கோவில்:

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி,  தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல்கள், அதிகாரி முற்றுகை, சட்டமன்ற  உறுப்பினர்கள் தலையீடு என தள்ளுமுல்லு, மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்நிலையில், நாகர்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, தேர்தல் அதிகாரியை திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும்  கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பை கடந்த 7ந்தேதி தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி வரும் மே மாதம் 12ந்தேதி தேர்தல் தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு அனுமதிப்பெற்ற 18775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் 5 கட்டங் களாக நடத்தப்பட்டு, கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 18,775 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முதல் கட்டமாக   மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியின் அதிகாரத்தை பிடிக்க கடுமையான போட்டிகள் அரசியல் கட்சியினரிடையே நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி தேர்தல் அதிகாரியை  திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்எல்ஏக்கள் ஆஸ்டின், விஜயதாரணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேர்தல் அதிகாரி அழகேசன் வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிடாமல், ஆவணங்களுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் வேட்பாளர்கள் வங்கி அலுவலகத்தை பூட்ட விடாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேர்தல் அதிகாரிகள் வராததால் திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலி கூட்டுறவு சங்கத்தில் இரவு 9.00 மணி வரை வேட்பாளர் பட்டியல் ஒட்டவில்லை என்று கூறி திமுக எம்எல்ஏ ஆடலரசனுடன் திமுகவினர் மற்றும் அ.ம.மு .கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பதவிக்கு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி அதிமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை குத்தாலம் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாகக் கூறி திமுகவினர் போராட்டம் நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி யூனியனுக்கு உட்பட்ட, கிளாமலை தொடக்க வேளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அதிமுக மற்றும் தினகரன் ஆதவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

ரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், டிடிவி அணியினர் 36 பேரின் மனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அலுவலர், முன்னாள் நிர்வாகிகள் வெற்றிபெற்றதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிடிவி தினகரன் அணியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு சங்க தேர்தல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.