முதல்வருடன் செல்பி
முதல்வருடன் செல்பி

நெட்டிசன்:

கடந்த (அக்டோபர்) 31ம் தேதி, கேரள முன்னாள் முதல்வர் உம்மண்சாண்டியின் பிறந்தநாள். அன்று, பத்திரிகையாளர் திருவட்டாறு சிந்துகுமார் எழுதிய முகநூல் பதிவு:
கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியை ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். முதல் முதலாக சந்தித்து 2006.ம் ஆண்டுமுதல்வரின் அலுவலக நிகழ்ச்சிகளை நேரடியாக இணையம் வாயிலாக உலகில் எங்கிருந்தும் பார்க்கலாம் என்ற நிகழ்ச்சி துவக்கவிழாவில் பார்த்துபேசினேன். ”நான் ஒரு திறந்த புத்தகம்” என்ற தலைப்பில் குமுதம் வார இதழில் அந்த செய்தி வெளியானது.
அதன்பின் 2011.ல் திருவனந்தபுரம் பத்மனாபசாமிகோயிலில் தங்கப்புதையைல் ரகசியம் வெளிவர கோயிலுக்கு சென்று மேட்டர் தயார் செய்துவிட்டு அப்படியே முதல்வரிடமும் கருத்துகேட்கலாம் என அப்போது முதல்வர் தங்கியிருந்த வீட்டுக்குசென்று பேட்டி எடுத்தேன். எந்த வித அப்பாயிண்ட்மெண்டும் இல்லாவிட்டாலும் பேட்டிக்கு என்னை அனுமதித்தார். பேட்டி எடுத்தேன். மகிழ்சியாக பேசினேன். எனக்காக உம்மன்சாண்டியின் மனைவி டீ போட்டுதந்தார்.

 டீ போட்டுக்கொடுத்த  முதல்வர் மனைவி
டீ போட்டுக்கொடுத்த முதல்வர் மனைவி

அதன்பின்னர் முல்லைப்பெரியார்அணை தொடர்பாக 2013.ல் அவரை சந்திக்க முன் தினம் நேரம் கேட்டேன். காலையில் வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தார் அவரது உதவியாளர். அங்கே போனால் அவர் வரவில்லை. கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரம் வந்தவர் நேராக குளியறைக்குச்சென்று குளித்துவிட்டு வேகம் வேகமாக உடை அணிந்து, சட்டை பட்டன்கூட போட நேரமின்றி காரில் ஏறப்போக (படம்) அவரை குறுக்கிட்டு பேட்டி என்றதும், சட்டசபைக்கு வரச்சொல்லி, சொன்னது போலவே அங்கே வைத்து பேட்டி தந்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு துவக்கத்தில் அவரது மனைவியிடம் பேட்டி கண்டேன்.
கடந்த ஆண்டு தேர்தல் நேரத்தில் மீண்டும் அவரிடம் பேட்டி எடுக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன். மறுநாள் காலையில் அவரது வீட்டுக்குச்சென்றால், அவரது உதவியாளர் முதல்வர் இப்போது வெளியே செல்ல உள்ளார் எனக்கூறியதும் எனக்கு ஷாக். நான் நேரில் அவரைச்சந்தித்து பேசவும், “நான் பாறசாலைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன். என் கூட காரிலேயே வாங்க பேட்டி எடுக்கலாம்!” என்றார். அதன்படி அவரது காரில் 15 கிமீ தூரம் பயணித்து பேட்டி எடுத்து, கூடவே செல்பியும் எடுத்துக்கொண்டேன்.
உம்மன்சாண்டி காலத்தில் கேரளா பலவகைகளில் முன்னேற்றம் அடைந்தது என்பதற்கு சான்றாக பிராவச்சம்பலம், கரமனை ரோடு விரிவாக்கம் உட்பட பலவற்றை சொல்லலாம். போனில் அழைத்தால் கூட பதில் தருவார். அவர் நடத்திய “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சி வாயிலாக பல்லாயிரக்கணக்கான ஏழைமக்கள் பயன்பெற்றனர். எளிமையான மனிதர்.
எளிமையான மனிதர். இன்று 74.வது பிறந்த நாளைக்கொண்டாடும் உம்மன்சாண்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!