நெட்டிசன்:
ஞ்சல் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.பி.ஜெயராமன், சிறந்த ஓவியரும்கூட.  நடிகர் சிவகுமார் சமீபத்தில் நடத்திய ஓவியக் கண்காட்சியில் தனக்கு ஏற்பட்ட அனுவங்களை முகநூலில் பதிந்திருக்கிறார். அவற்றில் இருந்து…

கண்காட்சியில் சிவகுமார்
கண்காட்சியில் சிவகுமார்

“சிவகுமார் அவர்கள   இது எனது 15ம் வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது நான் வரைந்த ஓவியமாகும். கருப்பு மை பேனாவால் தீட்டிய கோடுகளை மட்டுமே கொண்டு உருவாக்கிய ஓவியம். “பேசும் படம்” என்ற சினிமா பத்திரிகையில் வெளியான திரு சிவகுமார் தனது முகத்தையே வரைந்த அவரது ‘செல்பி’ – கோட்டு ஓவியத்தை ‘காப்பியடித்து’ வரைந்தது.
சிவகுமார் அப்போதுதான் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருந்தார். எனது முயற்சியில் 75 % வெற்றியடைந்தேன் என்று நினைக்கிறேன். இதனை அவருக்கு அனுப்பி வைத்தேன். எனது ஓவியத்தைப் பாராட்டி அவர் விரிவான கடிதம்
"செல்பி வேண்டாம்!"
“செல்பி வேண்டாம்!”

எழுதினார். தனது புகைப்படமும் அனுப்பினார். அது முதல் அவரது நட்பு கிடைத்தது.
சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்ற நடிகர் திரு சிவகுமாரின் ஓவியக் கண்டகாட்சிக்கு சென்றிருந்தேன்.  அவருடன் பேசிக்கொண்டே ஒரு செல்பி எடுக்க முயன்றேன்.
உடனே எனது மொபையில் போனை எனது கையிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிவிட்டார். “எனக்கு பிடிக்காத மேட்டர்களில் இந்த செல்பியும் ஒன்று, என்னோடு யாராவது செல்பி எடுத்தால் அந்த போனை பிடுங்கி தூர எறிந்து விடுவேன். போகட்டும் பிழைத்துப் போ” ” என்று கூறிவிட்டு அருகிலிருந்த அவரது கார் டிரைவர் கோபியிடம் எனது மொபையில் போனைக் கொடுத்து இந்த படத்தை எடுத்துக் கொடுத்தார்.
சிவகுமார் வரைந்த, "பியூர் வாட்டர் கலர்" ஓவியம்
சிவகுமார் வரைந்த, “பியூர் வாட்டர் கலர்” ஓவியம்

எனக்கு உடனே செல்பி ஸ்பெசலிஸ்ட் நமது பிரதமர் மோடியின் நினைவு வந்தது. அப்படியும் ஒருவர். இப்படி ஒருவர்.
பிறகு, கண்காட்சியில் இருந்த படங்கள் ஒவ்வொன்றையும் நான் எனது மொபையில் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அதனை கண் சிவகுமார், “ஏன்டா இப்படி அவஸ்தைபடுறே? இது எல்லாத்தையுமே நான் உனக்கு அனுப்புறேன்” என்று சொன்னார்.
அது போலவே அவரது ஓவியங்களின் டிஜிட்டல் பிரதிகளை வாட்சப்பில் எனக்கு அனுப்பியுள்ளார்.
அதில் ஒன்றுதான் இந்த ஓவியம். இது பியூர் வாட்டர் கலர் ஓவியம் ஆகும். அதென்ன பியூர் வாட்டர் கலர்? வெள்ளை வண்ணத்தை துளியும் பயன்படுத்தாமலே வரைந்ததாகும். இதுபோல நூற்றுக்கணக்கான ஓவியங்களை அவர் வரைந்திருந்தாலும் அவற்றுள் ஒரு சில ஓவியங்கள் மட்டுமே அவரது இல்லத்தின் சுவர்களை அலங்கரித்துக் கொண்டுள்ளன. இந்த ஓவியம் அதில் ஒன்றாகும்.