6 – 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் அக்டோபரில் திறக்கப்படுமா? : முதல்வர் முடிவுக்கு காத்திருப்பு

Must read

சென்னை

ன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  கடந்த 14 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்

இதில் சிலர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம் எனவும் வேறு சிலர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் திறக்கலாம் என ஆலோசனை தெரிவித்தனர்.  இந்த கருத்துக்களைத் தொகுத்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு க ஸ்டாலினிடம் அறிக்கையாக அளித்துள்ளார்.  அந்த அறிக்கையில் அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 வகுப்புக்களுக்குப் பள்ளிகளைத் திறக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற உள்ளது.  அப்போது இந்த அறிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறையின் கருத்துக்களின் அடிப்படையில் இது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

More articles

Latest article