தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Must read

சென்னை

மிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாகத் தென்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

செப்டம்பர்.18, 19-ம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article