நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபு தேவா சென்றுள்ளார்.

அங்கு வடிவேலுவை சந்தித்த பிரபு தேவா இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு ஒன்றை இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2001 ம் ஆண்டு பிரபு தேவா, காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் பிரபு தேவாவுடன் சேர்ந்து வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றை நினைவு படுத்தும் விதமாக இருந்தது அந்த ட்விட்டர் பதிவு.

ஸ்டீவ் வாக் என்ற பெயரில் வடிவேலு அந்த படத்தில் செய்த நகைச்சுவை கலாட்டாவில் ஒன்று ‘சிங் இன் தி ரெயின்’ என்ற பாடல்.

அந்த பாடலை மீண்டும் பாடி அசத்தியதோடு இருவரும் சிரித்து மகிழ்ந்த காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.