சென்னை:

8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என சினிமா தியேட்டர் அதிபர்கள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

தியேட்டர் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும்படி மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.