தலைப்பை பார்த்து குழப்பமா? படம் பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் இருக்கிறது..! சசிகுமாரின் முந்திய பட வரிசையில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது.
தெக்கத்தி கிராமம், துரோகம், அரிவாள், ரத்தம்!
சாத்தூரில் ஆடுதொட்ட நடத்தி வருகிறார் கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி.)  ஊருக்குள் அவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதோ.. அந்த அளவுக்கு  கொம்பையாவுக்கு பகையும் உண்டு. அவருக்கு பாதுகாப்புக்கு அடியாளாக இருக்கிறார் “கிடாரி” சசிகுமார்.

சசிகுமார்
சசிகுமார்

கொம்பையா, கழுத்தில் குத்துபட்டு, பிறகு மருத்துவமனையி் கிடக்கிறார். அவரைக் குத்தியது யார் என “கிடாரி” கண்டுபிடிப்பதுதான் கதை.
இதற்கிடையே கிடாரிக்கும் அவரது மச்சானுக்கும் (ஓ.ஏ.கே. சுந்தர்) பிரச்சினை.
ஏற்கெனவே பல படங்களி்ல் பார்த்த அதே அதே அதே முரட்டு (!) கதாபாத்திரத்தில் சசிகுமார்.  நடுவே காதல் காட்சிகள்… ஹிஹி!
நிகிலா
நிகிலா

ஹீரோயின் நிகிலா. (வேறொன்றும் சொல்வதற்கில்லை!)
நீண்ட நாட்களுக்கு் பிறகு நெப்போலியன். பத்து நிசமிசம் வந்தாலும்,ரசிக்க வைத்துவிடுகிறார்  மற்றபடி சுஜா, ஓஏகே சுந்தர் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி

இவர்களை எல்லாம்விட  தனது முரட்டு நடிப்பால் வசீகரிப்பவர், வேல ராமமூர்த்தி. கெம்பையா பாண்டயன் என்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவரது பார்வை, பாடி லேங்குவேஜ்.. அத்தனையும் அருமை.
எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு சாத்தூர் பகுதியை இயல்பாக எடுத்துக்காட்டியிருக்கிறது.  இசை – தர்புகா ஷிவா.  பின்னணி இசை  சிறப்பாக இருக்கிறது.
படத்தின் கதையும் சரி, அதை எடுத்த விதமும் சரி.. எரிச்சலூட்டுகின்றன.
அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன்.
தென் மாவட்டங்கள் என்றாலே வன்முறைதான் என்கிற மூட நம்பிக்கையை தமிழ்த்திரையுலகம் இன்னும் எத்தனை காலம்தான் பிடித்துத்தொங்கப்போகிறது?
காதலித்தால் கொலை, காதலிக்காவிட்டால் கொலை…. என்று கொலைகள் விழும் சூழலில் இதுபோன்ற வன்முறைப்படங்களை நிறுத்தித்தொலைத்தால்தான் என்ன?
கிடாரி – பச்சை ரத்தம்!