நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிய உயர் நீதி மன்றத்தில் மனு!

Must read

சென்னை:
டிகர்கள் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி செற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், சங்க மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிய கோரி, உயர் நீதிமன்றத்தில் நடிகர் வாராகி வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

விஷால் - கார்த்தி - நாசர்
விஷால் – கார்த்தி – நாசர்

நடிகர் சங்க உறுப்பினராக இருப்பவர் வாராகி இவர், “நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் பொறுப்புக்கு வந்த பிறகு 3 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டினார். இது குறித்து விளக்கம் கேட்டு சங்க நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அவருக்கு விளக்கம் அளிக்க, சங்கத்துக்கு வரச்சொல்லி நிர்வாகம் கடிதம் அனுப்பியது.
வாராகி
வாராகி

இதையடுத்து சங்கத்துக்குச் சென்ற வாராகியை, அங்கிருந்த பூச்சி முருகன் பாலமுருகன் ஆகியோர்,  நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  ராகி புகார் தெரிவித்தார்.
இது குறித்து வாராகி தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும், பிறகு  சென்னை  போலீஸ் கமிசனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், தனது புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடகோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை வரும் ஆறாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

More articles

Latest article