விருந்தோம்பல்:

வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் மரியாதையே அலாதிதான். ஆனால் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து தங்கும் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இண்டர்நேஷன்ஸ் என்ற அமைப்பு எடுத்த சர்வேயில் பல முன்னேறிய நாடுகள் இந்த விஷயத்தில் பின் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
world immegrares
மிகவும் மோசமான நாடுகள் வரிசையிலேயே முக்கியமான நாடுகளாக டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் புலம் பெயர்ந்து வசித்துவரும் வெளிநாட்டினரில் 36% பேர் அந்தந்த நாட்டு குடிமக்கள் தங்களிடம் மிக மோசமாக நடந்துகொள்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இதுதவிர ஜெர்மனி 55-வது இடத்திலும், பிரான்ஸ் 56-வது இடத்திலும் உள்ளன. மேற்கண்ட அத்தனை நாடுகளிலும் புலம் பெயர்ந்தவர்கள் அந்தந்த நாட்டு மக்களுடன் சகஜமாக பழக பெரும் தடைச்சுவர்களாக இருப்பது கற்றுக்கொள்ள கடினமான மொழி மற்றும் வித்தியாசமான கலாச்சாரம் ஆகியனவாகும்.
ஆனால் அதே வேளையில் புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு இன்முகம் காட்டும் நாடுகள் வரிசையில் மெக்ஸிகோ, கோஸ்டாரிக்கா, உகாண்டா, கிரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வாழ்க்கைத்தரம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது புலம் பெயர்ந்து வாழ உகந்த நாடுகளாக தைவான், மால்டா, ஈடுவேடார் ஆகிய நாடுகள் உள்ளன. ‘தயவு செய்து அங்க மட்டும் போயிடாதீங்க’ என்று எச்சரிக்கத்தக்க நாடுகளாக கத்தார், இத்தாலி, டான்சானியா ஆகிய நாடுகள் அறியப்பட்டுள்ளன.
இங்கிலாந்து வேலைப் பாதுகாப்பு, விருந்தோம்பல் ஆகிய பண்புகளில் சிறந்திருந்தாலும் அங்கு காணப்படும் தலையை சுற்றவைக்கும் விலைவாசி அந்நாட்டை 33-வது இடத்துக்கு தள்ளியுள்ளது.
நன்றி: http://www.independent.co.uk/news/uk/home-news/unfriendliest-countries-for-expats-revealed-expatriates-emigration-sweden-denmark-kuwait-a7216316.html