மற்றவர்களால் முடியாதது ரிலையன்ஸ் ஜியோவால் மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? – ஒரு விரிவான அலசல்

Must read

ரிலையன்ஸ் ஜியோ – ஓர் அலசல்

 1. உயர்தர தொழில்நுட்பம்mukesh-ambani-reliance-jio-launch

ரிலையன்ஸ் ஜியோவின் அடிப்படைக் கட்டமைப்பு உயர்தர தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதற்கென அந்நிறுவனம் 100,000 கோடியை முதலீடு செய்து தனது கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் எந்த தொழில்நுட்ப சவாலையும் எதிர்கொள்ளும் விதத்தில் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 1. 2ஜி, 3ஜி, 4ஜி என்று தனித்தனியான பராமரிக்கும் தொல்லை இல்லை

மற்ற நிறுவனங்களுக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என்று தனித்தனியாக சேவையளிப்பது சிரமம். அவை ஒரே டவரில் மூன்று சேவைகளையும் தர வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் தனித்தனி. ஆனால் ரிலையன்ஸ் ஜியோவுக்கு இந்த சிக்கல்களெல்லாம் இல்லை. மற்ற நிறுவனங்கள் செய்யும் அதே செலவில் அவர்கள் தரும் 2ஜியை விட 100 மடங்கு அதிவேகமான VoLTE வாய்ஸ் சர்வீஸ் வசதியையும் 4ஜியையும் ரிலையன்ஸ் ஜியோவால் தரமுடியும்.

 1. முழுமையான .பி நெட்வொர்க்

ஜியோ பாரம்பரிய டெலிகாம் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், அதிவேக ஐ.பி நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் அதிவேக டேட்டா டிரன்ஸ்பர் சாத்தியம்.

 1. அதிக அளவு கட்டற்ற அலைக்கற்றைகளை கொண்டுள்ள நிறுவனம்

ஏர்ட்டெல் அதிக அளவு அலைக்கற்றைகளை கொண்டிருக்கும் நிறுவனமாக இருந்தாலும். ரிலையன்ஸ் ஜியோ அதிக அளவு “கட்டற்ற” அலைக்கற்றைகளை கொண்டுள்ள நிறுவனமாகும். 850MHz, 1800MHz and 2300MHz போன்ற அத்தனை அலைக்கற்றைகளையும் ஜியோ 4ஜி-க்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் அதிவேக இண்டர்நெட் சாத்தியமாகிறது.

 1. முதலீடு செய்ய அஞ்சாத பணம் கொழிக்கும் நிறுவனம்

மற்ற போட்டி நிறுவனங்கள் கடனில் ஓடிக்கொண்டிருக்கும்போது ரிலையன்ஸ் ஒரு பணம் கொழிக்கும் நிறுவனமாகும். எனவே உயர்தர தொழில்நுட்பத்துக்காக முதலீடு செய்வது ரிலையன்சுக்கு பெரிய காரியமல்ல.

 1. ஃபைபர் ஆப்டிக் பலம்:

அதிவேக டேட்டா கடத்தியான ஃபைபர் ஆப்டிகல் நெட்வொர்க்கையும், ஃபைபர் இணைக்கப்பட்ட கோபுரங்களையும் இந்தியா முழுவதும் கொண்டுள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது. இது ரிலையன்சுக்கு இருக்கும் மிகப்பெரிய பலமாகும்.

 1. இண்டர்நேஷனல் பேண்ட்வித்

ரிலையன்ஸ் ஜியோ செகண்டுக்கு 100 ஜிபி என்ற அளவுள்ள இண்டர்நேஷனல் பேண்ட்வித்தைக் கொண்டுள்ளதால் குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட்டை கொடுப்பது இந்தியாவில் ரிலையன்சுக்கு மட்டுமே சாத்தியம்.

 1. கிராமங்களிலும் சேவை

ரிலையன்ஸ் இந்தியா முழுவதும் குக்கிராமங்களிலும் வேரூன்றியுள்ளதால் அங்கும்கூட தனது 4ஜி சேவையைக் கொண்டு பெருமளவு வாடிக்கையாளர்களை ஈர்க்கமுடியும். அந்த இடங்களிலெல்லாம் போட்டி நிறுவனங்கள் 2ஜி சேவையை தருவதற்கே திணறிக் கொண்டிருக்கின்றன.

 1. நெருக்கடியற்ற நெட்வொர்க்

மற்ற் போட்டி நிறுவனங்கள் கால் டிராப், நெட்வொர்க் டிராபிக், குறைந்த வேகத்துடன் கூடிய இணைய தொடர்பு என்று திணறிக்கொண்டிருக்கும்போது. ரிலையன்ஸ் புத்தம் புதிதாக தனது நெட்வொர்க்கை துவங்கியுள்ளதால் நெருக்கடியற்ற அதிவேக தொடர்பு சாத்தியமே.

 1. VoLTE மற்றும் ஹெச்டி வாய்ஸ்/வீடியோ

VoLTE டெக்னாலஜி மூலம் அதிதுல்லிய ஹெச்டி வாய்ஸ்/வீடியோ சேவைகளை வழங்குவது ரிலையன்ஸ் ஜியோவால் இப்போது சாத்தியப் பட்டிருக்கிறது. மேலும் போட்டி நிறுவனங்களின் 2ஜி மற்றும் 3ஜி-யைவிட பல மடங்கு அதிவேகமாக இந்த சேவைகளை வழங்க முடியும். இதற்கென்று தனிக்கட்டணம் எதுவும் இல்லை என்பது வாடிக்கையாளர்களை ஜியோவின் பக்கம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

 1. இனி டெலிகாம் ஆபரேட்டர் அல்ல அதற்கும் மேல.

வீடியோ ஆன் டிமாண்ட், லைவ் டிவி இப்படி பல வசதிகளை குவித்திருப்பதால் இனி ரிலையன்ஸ் ஜியோ வெறும் டெலகாம் ஆபரேட்டர் அல்ல மீடியா ப்ரவைடர் என்று தொலைதொடர்பு நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

 1. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையல்ல, மொத்த வருமானமே முக்கியம்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களைவிட ரிலையன்ஸின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால் திக்கி திணறி 2ஜி, 3ஜி,4ஜி என்று சேவைகளை வழங்கி சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.195 மட்டுமே பெற முடிகிறது.. ஆனால் ஜியோ தனது அதிவேக 4ஜி சேவைக்கு ஒரு வாடிக்கையாளரிடமிருந்து தலா ரூ.300-500 வரை பெற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோவிடம் காணப்படும் மேற்கண்ட வசதிகளே அதை அதன் போட்டியாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தியிருக்கிறது.
 
நன்றி:  http://telecomtalk.info/jio-vs-incumbents-why-jio-can-offer-affordable-tariff-and-incumbents-cannot/156491/

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article