அரியலூர்: அரியலூரில் இந்து கோயில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக,  இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள சாலக்கரை கிராமத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் மற்றும் அய்யனார் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்த மான 90க்கும் மேற்பட்ட இடங்கள், போலியான பத்திரங்கள் மூலம் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நபர்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது, இதுதொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அந்த கிராமத்தில் உள்ள  இரட்டை பிள்ளையார் கோயிலின் தர்மகர்த்தா சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அவரது  மனுவில், “இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் எங்கள் கிராமத்தில், சமீபகாலமாக வேறு கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்துவர்களால், கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட் வருகின்றனர். அவர்கள் இந்து கோவில்களுக்கு  90-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை சிலரின் துணையோடு  ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் தற்போத  சின்னப்பர் தேவாலயம் கட்டப்பட்டுள்ளதோடு,  கல்லறையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர்கள் எங்கள் கோயில் வழிப்பாடுகளில் தலையிடுவதோடு, திருவிழாக்களை தடுக்கும் வகையிலும் செயல்படுகின்றனர்.

இதுதொடர்பாக  சாலக்கரை ஊர் பொதுமக்களின் சார்பில்,  இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறையிடம் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள்  அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று  பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு,  2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க தமிழகஅரசு நிதியுதவி! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..