கிறிஸ்தவ மதபோதகர் 'இமானுவேல்' மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….?

Must read

நெல்லை,
தூத்துக்குடி அருகே மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது கொலையா என்று அந்த பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
anusiya
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த ஜோசுவா இமானுவேல்ராஜ் (35). இவர் அப்பகுதியில்  கிறிஸ்தவ மதபோதகராக இருந்து கர்த்தர் பெயரால் ஜெபம் செய்து  வந்துள்ளார்.
தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இவர் மதப்பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இவருடைய குறிக்கோளே இளம்பெண்கள் மற்றும் கஷ்டபடும் குடுப்பத்தினரை மயக்கி அவர்களை மதமாற்றம் செய்வதுதான் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மேலும், இளம்பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி, அவர்களை தன்னுடன் அழைத்து சென்று மத பிரசாரம் செய்து வந்ததும், அப்போது பலரை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அந்த படத்தை காட்டி, மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை போன்றவற்றை பறித்தும்,  சில பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இதுகுறித்து, இவரால் பாதிக்கப்பட்ட பாப்பான்குளத்தை அடுத்துள்ள கோவிந்தராஜ் என்பவரின் மகள் அனுசுயா, தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அனுசுயாவை தொடர்ந்து மேலும் பல பெண்களும் மதபோதகர் மீது  புகார் அளித்ததை தொடர்ந்து மதபோதகர் இமானுவேலை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதபோதகர் மீது புகார் அளித்த அனுசியா நேற்று திடீரென பாப்பன்குளம் அருகே நெல்லை – மதுரை  இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அவரது உடல் தண்டவாளம் அருகே கிடந்தால், அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் ‘தற்கொலை’ என்று கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல… அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார். அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்.
ஆகவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு தெரிவிக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article