கொச்சி

ந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பல தொழில்கள் முடங்கின.  அவற்றில் மீன்பிடித் தொழிலும் ஒன்றாகும்.  ஊரடங்கால் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகள் அடியோடு நின்று போயின.  இதனால் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் மிகவும்  பாதிக்கப்பட்டனர்.  அதன் பிறகு மத்திய அரசின் அறிவுரைப்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அவ்வகையில் கடல் உணவு ஏற்றுமதிக்கும் மாநில அரசுகள் அனுமதி அளித்தன.  இந்தியாவில் இருந்து அதிக அளவில் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்வது கேரள மாநிலம் ஆகும்.   குறிப்பாக இங்கிருந்து அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் இங்கு மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் கடல் உணவுகளுக்கு கொரோனா அச்சம் காரணமாகச் சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கேரள மாநில மொத்த ஏற்றுமதியில் சீனாவுக்குக் கடல் உணவுகள் ஏற்றுமதி சுமார் 25% ஆகும். அடுத்தபடியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

அகில இந்தியக் கடல் உணவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கேரளா பகுதி தலைவர் அலெக்ஸ், “சீன அரசின் இந்த உத்தரவால் நாங்கள் பலரும் கடும் பாதிப்பில் ள்ளொம்,  வங்கிக் கடன்களுக்கு எங்களுக்குத் தொடர்ந்து நோட்டிஸ்கள் வருகின்றன.  இந்நிலையில் அரசின் உதவியைத் தவிர எங்களுக்கு வேறு நிவாரணம் இல்லாத நிலை உள்ளது.   ஆனால் எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எவ்வித பதிலும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.