சென்னை: மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காஞ்சிபுரம் செல்லும் வழியில் முதலவர் ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது அவரை  சிறுவர்கள், இளைஞர்கள் , பொதுமக்கள் என பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்போடு மாநகராட்சியில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை தொடங்குவதன் அடையாளமாக, சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

பின்னர், மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய  செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு செல்லும் வழியில்,  பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே ஏரியை பார்வையிடச் செல்லும் வழியில் தேநீர் கடையில் மக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், இளைஞிகள், சிறுவர்கள்  என ஏராளமானோர் அங்கு வந்து, முதல்வருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.