சென்னை: காமராஜர் பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு அரசால் கல்வி வளர்ச்சிநாள் என கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி, தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பொது நூலகங்களுக்கு வழங்கினார் ஸ்டாலின்.
தனக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அன்புப் பரிசாக வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தமிழ்நாடு அரசு பொது நூலகங்களுக்கு வழங்கினார்.
சென்னை நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளில் (15.7.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு புத்தங்களை பரிசளித்தார். பின்னர், தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரச வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2017-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றத்திலிருந்தும், 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகும், தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து, அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளான இன்று சென்னை நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் சமீபகாலங்களில் தனக்கு வழங்கப்பட்ட 7,740 புத்தகங்களை, தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார். இப்புத்தகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், நூலகங்களுக்கு முதல்வர் அர்ப்பணித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.