போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவினில் பெற்று கொள்ள முதலமைச்சர் உத்தரவு 

Must read

சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு கிலோ இனிப்பும், காரமும் வழங்கப்படுவது வழக்கம்.
தீபாவளியை குடும்பத்தினருடன் இனிப்பை பகிர்ந்து உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இப்படி ஸ்பெஷல் ஸ்வீட் வழங்கப்படும். இதுபோல இனிப்பு வழங்குவது போக்குவரத்துக் கழகங்களில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

More articles

Latest article