சென்னை: முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்ற மக்களை சந்தித்து, முகக்கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்றும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அத்துடன்,  பொத இடங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முக்கவசம் அணியார்களிடம் இருந்து அபராதங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக கவசங்களை வழங்கினார். சென்னை அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, அந்த பகுதியில் முகக்கவசம் அணியாமல் சிலர் சென்றுகொண்டிருந்தை கண்ட முதல்வர், காரை நிறுத்தி, அதில் இறங்கியதுடன்,   கொஞ்சம் தூரம் நடந்து சென்று முக்கவசம் அணியாதவர்களை அழைத்து அவர்களுக்கு மாஸ்க் வழங்கினார். அப்போது, அங்கு மாஸ்க் அணியாமல் நின்றிருந்த இளைஞர் ஒருவருக்கு அவரே மாஸ்கை போட்டுவிட்டார். அப்போது  முகக்கவசம் அணியாமல்  பொது இடங்களுக்குச் செல்வது பாதுகாப்பு இல்லை  என்றும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சரே வீதியில் இறங்கி விழிப்புணர்வு செய்த இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுதாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையில் மாஸ்குகளை வைத்துக்கொண்டு அனைவருக்கும்  வழங்கி வந்தார்.