சென்னை: சென்னை மத்திய சதுக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான சென்னை சென்ட்ரலில்  ரூ.34.22 கோடியில் அழகு மிளிர கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையின் ஒரு பகுதி பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைப்பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  திறந்து வைத்தார். அத்துடன் அழகுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத்திட்டத்தின் கீழ் ரூ.21.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைத்தார் இதைத்தொடர்ந்து, சென்ட்ரல் சதுக்கம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் முதலமைச்சர் நட்டு வைத்தார்.

இதனால் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வந்த செல்லும் பயணிகள் பயன்பெறுவர்.  மத்திய சதுக்கத்தின் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவீன கட்டமைப்புகளுடன் சுரங்க நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.