ஸ்ரீநகர்:

நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் பிரபுவை நீக்க காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முப்தி முடிவு செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் நிலவுது அரசியல் பிரச்னை இல்லை என்று ஹசீப் பிரவு கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் புயலை கிளப்பியது. பிரிவினைவாதிகள் உள்பட பல தரப்பில் இருந்து இந்த கருத்தை விமர்சனம் செய்தனர்.

காஷ்மீர் பிரச்னையில் மக்கள் ஜனநாயக கட்சி தனது நிலைப்பாடை தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது. எனினும் காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை தான் பிடிபி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம தீர்வு காணப்படும் என்று தெரிவித்தது. எனினும் ஹசீப் பிரபுவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை கவர்னருக்கு முதல்வர் மெஹபூபா முக்தி அனுப்பியுள்ளார்.

பிடிபி&பாஜக கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் ஹசீப் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட ஒப்பந்ததில் இரு கட்சியினரும் கையெழுத்திட்ட பின்னர் தான் பிடிபி ஆட்சி அமைத்தது.