சென்னை:
ன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று செஸ் கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் கபூர், 130 நாட்களில் ஒரு முறை கூட இல்லை என்ற பதில் தமிழ்நாடு அரசிடம் இருந்து வரவில்லை. தன்னம்பிக்கை ஊட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று தெரிவித்தார்,

மேலும், வரலாற்றில் மிகச்சிறந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இது தான் எனக் கூறிய அவர், அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் நடந்த முதல் ஒலிம்பியாட் போட்டி நாம் ஒவ்வொருவரும் பெருமைப் பட வேண்டிய ஒன்று எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியப் பெண்கள் அணி வெண்கலம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தங்கம் வெல்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்தோம் எனக் கூறினார்.